/

ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போராட்டம்: வைகோ உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இன்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், வைகோ, நல்லக்கண்ணு, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு

News image
Updated On :28 மார்ச் 2013, 7:14 am

இன்பராஜ்

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இன்று காலை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில், வைகோ, நல்லக்கண்ணு, கொளத்தூர் மணி உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்டவர்களை போலீஸார் பின்னர் கைது செய்தனர்.

இதனிடையே இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப செய்தித் தொலைக்காட்சி சேனல்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களுடன் அந்த இடத்துக்கு வந்தனர். அவர்களை மாவட்ட எஸ்.பி. ராசேந்திரன் அனுமதிக்க மறுத்ததுடன், அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

இதனால், மாவட்ட எஸ்.பி.யைக் கண்டித்து, பத்திரிகையாளர்கள் அங்கே கோஷம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.