2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

சிதம்பரம் அருகே சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட இரு போலீஸார் ஆயுத படைக்கு மாற்றம்

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து ஸதம்பித்தது. போக்குவரத்தை

News image
Updated On :29 மார்ச் 2013, 10:39 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே பணியில் இருந்த போது போலீஸ் உடுப்புடன் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலர் ஆகிய இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து ஸதம்பித்தது. போக்குவரத்தை சீரமைக்க புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், தலைமைக்காவலர் பரமசிவம் ஆகிய இருவரை அனுப்பி வைத்தார். அங்கு சென்று பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கும் இடையே போக்குவரத்தை சீரமைப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை தாக்கிக் கொண்டு சாலையில் உருண்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டனர். அப்பகுதியில் மக்கள் இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா, ஏஎஸ்பி எம்.துரையை புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சம்பவம் உண்மை என தெரியவந்தததால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், தலைமைக் காவலர் பரமசிவம் ஆகியோரை உடனடியாக கடலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி முருகன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.