திருச்சி பொன்மலை கீழ்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கல்யாணராமன் (75). இவர் சென்னை மீஞ்சூர் பாப்பாத்திநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி சென்னை சேப்பாக்கம் பிரகாஷ்ராஜ் (71) என்ற பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இவர் சென்னை- காரைக்கால், கும்பகோணம், பெங்களூர், காட்பாடி, கோயம்புத்தூர், பங்காரப்பேட்டை, ஆந்திரா செல்லும் ரயில்களில் முதல்வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்து பயணிகளுடன் பயணியாக பயணம் செய்து, பொருள்களையும், நகைகளையும் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் திருச்சி ரயில்வே போலீஸ் சூப்ரண்டன்ட் கயல்விழி, துணை போலீஸ் சூப்ரண்டன்ட் ராஜவேல் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், அக்பர்கான் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படை அமைத்து கல்யாணராமனை தேடி வந்தனர்.