அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கருணை அடிப்படையில் 396 இளநிலை உதவியாளர் பணியிடத்தை நிரப்ப முதல்வரிடம் கோரிக்கை

பள்ளிக் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு 396 இளநிலை உதவியாளர் பணியிடத்தை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து

News image
Updated On :6 மே 2013, 2:27 pm

G.Sundararaj

பள்ளிக் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் காத்திருப்போருக்கு 396 இளநிலை உதவியாளர் பணியிடத்தை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் ஜெலலிதாவை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.

கடிதத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு பணியில் பணிபுரிந்து கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருக்கும் போது அகால மரணடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கு 396 பேர் தேர்வு செய்யப்பட்டு இதுநாள் வரை பணி வழங்கப்படாமல் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரி சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்ப நிலை, வேலை நிலவரம் பற்றி குறிப்பு எடுத்துக் கொண்டு சில சான்றுகளை சமர்பிக்கும்படி ஆணையிட்டுள்ளனர்.

அதன்படி சான்றுகளை கொடுத்தும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பணி வழங்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படாததால், அவர்கள் மிகுந்த வேதனையில் மூழ்கியுள்ளனர். எனவே தமிழக முதல்வர் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்காக காத்திருக்கும் 396 பேருக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணி ஆணை வழங்கி சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களை காப்பாற்றிட வேண்டுகிறேன் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.