29 ஆடுகளை திருடிய இருவர் கைது!
சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு கிராமத்தைச் சேர்ந்த யேசுதாஸ். இவருக்கு சொந்தமான ஆடுகள் காட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது முகையூரைச் சேர்ந்த சீனுவாசன் (46),


சிதம்பரம் அருகே 29 ஆடுகளை திருடிச் சென்ற இருவரை தாலுக்கா போலீஸார் கைது செய்து ஆடுகளை மீட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள துணிஞ்சிரமேடு கிராமத்தைச் சேர்ந்த யேசுதாஸ். இவருக்கு சொந்தமான ஆடுகள் காட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது முகையூரைச் சேர்ந்த சீனுவாசன் (46), உடையார்பாளையம் தாலுக்காக காற்றாங்குறிச்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (41) ஆகிய இருவரும் சேர்ந்து ஆடுகளை திருடி விற்க ஓட்டிச் சென்றனர்.
ஆடுகளை காணாதது கண்டு அதிர்ச்சியுற்ற யேசுதாஸ் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட இருவரையும் கைது செய்து, அரியலூர் மாவட்டம் வாத்தியாகுடிகாடு பகுதியில் கட்டிவைக்கப்பட்டிருந்த திருடுபோன 29 ஆடுகளை மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...