அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தானே புயல் வீடுகளுக்கு ரூ.1.50 லட்சம் வழங்க முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கோரிக்கை

தமிழ்நாட்டை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் சிறப்பான திட்டத்தை தாங்கள் அறிவித்து அத்திட்டத்தின்படி வீடு கட்டும் பணி

News image
Updated On :7 மே 2013, 11:56 am

G.Sundararaj

தானே புயல் வீடுகள் கட்ட ரூ.1 லட்சம் வழங்குவது என்பதை உயர்த்தி ரூ 1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் சென்னை கோட்டையில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தார்.

கடிதத்தில்: தமிழ்நாட்டை தாக்கிய தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டும் சிறப்பான திட்டத்தை தாங்கள் அறிவித்து அத்திட்டத்தின்படி வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமானப் பொருள்களின் கடுமையான விலை உயர்வால் பயனாளிகள் வீடுகட்டும் பணியை தொடர முடியமால் தவித்துக் கொண்டுள்ளார்கள். ஏற்கனவே இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் தொகையின ரூ 1.20 லட்சமாகவும், பசுமை வீடு திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ 1.80 லட்சம் தொகையை, ரூ 2.10 லட்சமாகவும் உயர்த்தி ஆணை பிறப்பித்தீர்கள். அதுபோல தானே புயல் வீடுகளுக்கும் நிர்ணயமிக்கப்பட்ட தொகை ரூ.1 லட்சத்தை ரூ 1.50 லட்சமாக உயர்த்தி ஏழை, எளிய மக்கள் வீடு கட்டும் பணியினை நிறைவு செய்ய உதவிட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.