கள்ளத்தனமாக செம்மண் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்!
சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா இன்று காலை ரோந்து சென்ற போது சிதம்பரம் அருகே சி.முட்லூர்-பரங்கிப்பேட்டை சாலையில் செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரைக்காடு


சிதம்பரம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக செம்மண் ஏற்றி வந்த இரு லாரிகளை வட்டாட்சியர் எம்.விஜயா கைப்பற்றி பறிமுதல் செய்தார்.
சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா இன்று காலை ரோந்து சென்ற போது சிதம்பரம் அருகே சி.முட்லூர்-பரங்கிப்பேட்டை சாலையில் செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரைக்காடு பகுதியிலிருந்து விழுப்புரம் வடவானூர் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் தனபால் ஒரு முறை அனுமதி சீட்டு பெற்று பலமுறை செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்து. இதனையடுத்து டிப்பர் லாரியை கைப்பற்றி சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.
அதேபோன்று சேத்தியாத்தோப்பு-கீரப்பாளையம் மெயின்ரோட்டில் செம்மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பாவைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் தனத்தம்பி என்பவர் ஒருமுறை அனுமதி சீட்டு பெற்று, பல முறை செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்து அந்த லாரியையும் வட்டாட்சியர் எம்.விஜயா கைப்பற்றி சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...