அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவிரி மேற்பார்வை குழு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தீர்ப்பு!: தமிழக உழவர் முன்னணி

காவிரி இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றம், 2007-ல் வெளியான இறுதி தீர்ப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடுவதற்கு பதிலாக கர்நாடக வழக்குரைஞர் ஃபாலிநாரிமன் வாதத்தை

News image
Updated On :11 மே 2013, 12:27 pm

G.Sundararaj

காவிரி மேற்பார்வை குழு அமைக்க ஆணையிட்டுள்ளது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தீர்ப்பாகும் என தமிழக உழவர் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

காவிரி இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசுக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றம், 2007-ல் வெளியான இறுதி தீர்ப்புக்கு மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடுவதற்கு பதிலாக கர்நாடக வழக்குரைஞர் ஃபாலிநாரிமன் வாதத்தை ஏற்று மேற்பார்வைக்குழுவை அமைக்க ஆணையிட்டுள்ளது. இக்குழு இறுதி தீப்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஏதும் இல்லாத வெள்ளுக்குழு.

அண்மையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை கூறி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்தியஅரசு தவிர்த்தது, உச்சநீதிமன்றம் இப்போதைய தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு எதையும் மத்தியஅரசுக்கு விதிக்கவில்லை. மொத்தத்தில் எந்த தீர்ப்பு கிடைத்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் இல்லை என்ற நிலைப்பாட்டில் மத்தியஅரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்றமும், கர்நாடகத்தின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் மன்றமாக உள்ளது. ஆகவே தமிழகஅரசு அனைத்து கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தை கூட்டு மத்தியஅரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருகிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.