எடியூரப்பாவை பாஜகவில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜகவில் இருந்து விலகி புதியகட்சி தொடங்கியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் எதுவும் இதுவரை எடுக்கவில்லை. எடியூரப்பா மீண்டும் பாஜகவில் சேர முன்வந்தால், அது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், மதன் லால் குரானா, உமாபாரதி போல எடியூரப்பாவும் மீண்டும் பாஜகவுக்கு திரும்புவாரா? என்பது குறித்து நான் எதுவும் கூறமுடியாது. எடியூரப்பா கட்சியில் சேருவது தொடர்பான முன்மொழிவுகள் எதுவும் கட்சி தலைமையிடம் இல்லை.
எடியூரப்பாவின் கஜக, ஸ்ரீராமுலுவின் பிஎஸ்ஆர் காங்கிரஸ், பாஜகவின் வாக்குகளை பறித்து சென்றதை ஒப்புக் கொள்கிறேன். பாஜகவின் பாரம்பரிய வாக்குகள் 3 பங்குகளாக பிரிந்ததால், சட்டப்பேரவை தேர்தலில் கட்சி தோல்வியடைய நேர்ந்தது. அப்போதைய எங்கள் தலைவராக விளங்கிய எடியூரப்பா, கட்சியில் நிலவிய உள்சண்டைகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தவறிவிட்டார். கட்சியில் இருந்து விலகிய எடியூரப்பா, ஆட்சி காலத்தில் செய்த முறைகேடுகளால் பாஜக தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தோல்வி அடைந்து விட்டோம். அதேபோல, மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் தோல்வியை தழுவினோம்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதால், நாடெங்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. மக்களவை தேர்தலில் கடந்த முறை கர்நாடகத்தில் வென்ற தொகுதிகளை தக்கவைத்து கொள்வோம். ஊழல், பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் காங்கிரஸ் அரசு மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். இந்தவிவகாரங்களை வாக்காளர்களிடம் கொண்டு சென்று, கடந்த முறை பெற்ற வெற்றியை உறுதி செய்வோம். மத்திய, மாநில தேர்தல்கள் வெவ்வேறு பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு நடக்கின்றன. எனவே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலை பாதிக்காது. மக்களவை தேர்தலில் கஜக, பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் எடுபடாது. காங்கிரஸ் ஆட்சி ஊழல் நிறைந்தது என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, பாஜகவின் செல்வாக்கை பெருக்கவும் திட்டமிட்டு செயல்படுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் உடனடி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

திருச்சி - காரைக்கால் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்

மாநில சீனியா் ஹாக்கி: காலிறுதியில் சென்னை, கோவை, விருதுநகா், நெல்லை, மதுரை, தஞ்சை அணிகள்

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
