கோவையில் அண்மையில் தீ விபத்து நடந்த வணிக வளாகத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக சாரம் கட்டப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை லட்சுமி மில் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து நகரின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த வணிக வளாகத்தின் இரண்டு தளங்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் அறிவித்தார்.
அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என, உள்ளூர் திட்டக் குழுமமும், மாநகராட்சியும் அறிவித்தன.
இந்தச் சூழ்நிலையில், அனுமதியின்றிக் கட்டப்பட்ட பகுதியை ஏன் இடிக்கக் கூடாது எனக் கேட்டு, சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இப்போது கட்டடத்தைச் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களிலும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலையிலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் க.லதா கூறுகையில், சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள் எவ்வித அனுமதியும் தரவில்லை என்றார்.
இது தொடர்பாக உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் சந்திரசேகர் கூறியது:
அனுமதி பெறாத இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தை ஏன் இடிக்கக் கூடாது எனக் கேட்டு, சம்பந்தப்பட்ட வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்தளங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளூர் திட்டக் குழுமத்தால் அனுமதி தரப்படவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

