அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழ்நாடு வண்ணமீன் திருவிழா கண்காட்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கு முதல் பரிசு

சென்னை தீவுத்திடலில் கடந்த மே 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகஅரசு மீன்வளத்துறை சார்பில் தமிழ்நாடு மீன்வளத்திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கண்காட்சி அரங்குகளை அமைத்திருந்தனர்.

News image
Updated On :13 மே 2013, 12:48 pm

G.Sundararaj

சென்னையில் தமிழகஅரசு மீன் வளத்துறை சார்பில் மே9-12ல் நடைபெற்ற தமிழ்நாடு மீன்வளத் திருவிழா மற்றும் கண்காட்சியில் அண்ணாமலைப் பல்கலை. அரங்கிற்க்கு முதல்பரிசு மற்றும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சென்னை தீவுத்திடலில் கடந்த மே 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகஅரசு மீன்வளத்துறை சார்பில் தமிழ்நாடு மீன்வளத்திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கண்காட்சி அரங்குகளை அமைத்திருந்தனர். இதில் கடல் வண்ணமீன்கள் மற்றும் நன்னீர் வழி வண்ணமீன்கள் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. கடல் வண்ணமீன்களுக்கான பிரிவினில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் புலத்தின் சார்பில் முனைவர் தி.த.அஜீத்குமார் தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினர் 10 வகையான க்ளெவ்ன் மீன்கள் மற்றும் இரண்டு வகையான டேம்செல் இன வண்ண மீன்களை பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் 25 விதமன இதர கடல் வண்ணமீன்கள் மற்றும் ஒரு மாதமே ஆன மீன் குஞ்சுகள், நடசத்திரமீன்கள், சுல்லா மீன்கள் போன்றவைகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.

நிறைவு நாளன்று நடைபெற்ற விழாவில் சிறந்த கடல் வண்ணமீன் அரங்கிற்கான முதல் பரிசு மற்றும் விருதினை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் புலத்திற்கு சமூகநலத்துறை அமைச்சர் பி.வளர்மதி வழங்கி கவுரவித்தார். துணைப் பேராசிரியர் முனைவர் தி.த.அஜீத்குமார் விருதினை பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், சென்னை மேயர் சைதை துரைசாமி, பாலகங்கா எம்பி, மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மீன்வளத்துறை இயக்குநர் முனியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.