அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பஸ் மீது கல்வீசிய பல்கலை. ஊழியர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகர் வடக்கிருப்பைப் சேர்ந்த விஜயக்குமார் (35). அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல ஆட்டோ மெக்கானிக் ஒர்க்க்ஷாப்பில் பி பிரிவு பொறியாளராக உள்ளார். இவர் மீது குமராட்சி மற்றும் அண்ணாமலைநகர் பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசி

News image
Updated On :13 மே 2013, 2:07 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் சரகத்தில் பஸ்கள் மீது கல்வீசிய வழக்கில் பல்கலை. ஊழியர் ஒருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் வடக்கிருப்பைப் சேர்ந்த விஜயக்குமார் (35). அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல ஆட்டோ மெக்கானிக் ஒர்க்க்ஷாப்பில் பி பிரிவு பொறியாளராக உள்ளார். இவர் மீது குமராட்சி மற்றும் அண்ணாமலைநகர் பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த இரு வழக்குகள் உள்ளது. தொடர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட விஜயக்குமாரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா கோப்புகளை  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார், ஜெயக்குமாரை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் திங்கள்கிழமை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.