அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தைய பல்மருத்துவக்கல்லூரியில் சிபிஐ போலீஸார் மீண்டும் சோதனை!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரியில் கடந்த பிப்.27-ம் தேதி சிபிஐ போலீஸார் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட சிபிஐ போலீஸார் குழுவினரும், பல்மருத்துவக்கவுன்சில் உறுப்பினரும், மகாத்மாகாந்தி

News image
Updated On :16 மே 2013, 1:42 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரியில் மீண்டும் இரண்டாவது முறையாக சிபிஐ போலீஸார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரியில் கடந்த பிப்.27-ம் தேதி சிபிஐ போலீஸார் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட சிபிஐ போலீஸார் குழுவினரும், பல்மருத்துவக்கவுன்சில் உறுப்பினரும், மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி டாக்டருமான சங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சிபிஐ குழுவினர் பல் மருத்துவப்புல முதல்வர் ரவி டேவிட் ஆஸ்டினிடம் விசாரணை நடத்தி திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கோப்புகளை கைப்பற்றி எடு்த்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து எஸ்பி தலைமையிலான 3 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். சிபிஐ குழுவினர், இந்தியன்வங்கி மேலாளருடன் பல் மருத்துவப்புல முதல்வர் ரவிடேவிட் ஆஸ்டின் அறைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பல்வேறு நிதி பரிவர்த்தனை தொடர்பான கோப்புகளின் நகல்களை பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. காலை 10 மணிக்கு விசாரணைக்கு வந்த குழுவினர் மதியம் 1 மணிக்கு திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.