அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியாவை ஆட்சி செய்வது நீதிமன்றம்தான்: பாஜக

கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே.வி.கண்ணன்பிள்ளை பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: ஆதர்ஷ், 2 ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஊழல் என தினம் ஒரு ஊழலால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல் முகம்சுளிக்க வைத்துள்ளது. அமெரிக்க ஜனநாயகம் சிறப்பாக இருப்பதற்கு

News image
Updated On :18 மே 2013, 9:19 am

G.Sundararaj

தினம் ஒரு ஊழல் என மத்திய அரசு செய்யும் தவறை நீதிமன்றம் சுட்டிக்காட்டியும், கண்டித்தும் நீதியையும், சட்டத்தையும் காப்பாற்றி வருகிறது. இந்தியஅரசை ஆட்சி செய்வது நீதிமன்றம்தான். நீதிமன்றம் இல்லையெனில் நாம் பெற்ற சுதந்திரம் பறிபோய்விடும் என பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தார்.

சிதம்பரம் மேலவீதி பெல்காம் அனந்தம்மாள் சத்திரத்தில் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்ட விவசாய அணித் தலைவர் ஆர.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட விவசாய அணித் தலைவர் எம்.ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கே.வி.கண்ணன்பிள்ளை பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: ஆதர்ஷ், 2 ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஊழல் என தினம் ஒரு ஊழலால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல் முகம்சுளிக்க வைத்துள்ளது. அமெரிக்க ஜனநாயகம் சிறப்பாக இருப்பதற்கு காரணம் அங்கு பத்திரிகை சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மேம்பட வேண்டும். பத்திரிகைகள் அரசை நல்வழிப்படும் நிலை வர வேண்டும். நீரின்றி அமையாது உலகு என பழமொழி உண்டு. உலகில் உள்ள 100 சதவீத நீரில் 97.5 சதவீத நீர் உப்பு, காரம், அமிலம் கலந்துள்ளதால் குடிக்க லாயக்கற்றது. மீதமுள்ள 2.5 சதவீத நீர்தான் குடிப்பதற்கு உகந்த நீராகும். இதில் 2.24 சதவீத நீர் தென் மற்றும் வட துருவத்தில் பணிப்பாறைகளாக உள்ளது. மீதமுள்ள 26 சதவீத நீரைதான் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படு்த்துவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2022ல் குடிநீர் கிடைக்காமல் அவதியுறும் நிலை ஏற்படும். அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் அதிக நீர் உள்ளது. ஆனால் நீரை நாம் முறையாக சேமிக்கவில்லை. மழைநீர் வீனாக கடலில் சென்று கலக்கிறது. கடலில் கலக்கும் நீரை சேமிக்க வேண்டும். எனவே விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நாமே குளம், குட்டைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும், வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் பாஜக மாநில விவசாய அணித் தலைவர் மலையன் சம்பத், பாஜக கோட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் ராமநாத், மாவட்டத் தவைவர் ஜெ.சுகுமாறன், பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் வி.கே.தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும், கடுமையான வறட்சியை பயன்படுத்தி விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி வழங்கி அனைத்து ஏரிகளையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்ஆதாரமான சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம்ஏரி தூர் வார ரூ.40 கோடி நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, பருவமழை தொடங்குவதற்குள் வீராணம்ஏரியை விரைந்து தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.