ஆம்பூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 12 ஆடுகள் திங்கள்கிழமை இறந்தது.
ஆம்பூர் அருகே மின்னூர் காளிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனு. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது மின்னூர் தேசிய நெடுஞ்சாலையை ஆடுகள் கடந்தன. அப்போது ஆம்பூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஆடுகள் மீது மோதியது. அதனால் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.