திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்து வந்து அருள்மிகு சுப்பிரமணியசுவாமியை தரிசித்தனர்..


வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்து வந்து அருள்மிகு சுப்பிரமணியசுவாமியை தரிசித்தனர்.
ஸ்ரீ முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் கொண்ட்டாப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் பெருவிழா முக்கியமானதாகும்.இந்த ஆண்டுக்காண விசாகத்திருவிழா,கடந்த 15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய து.விழாவையொட்டி தினமும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்துடன் உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்துக்கு சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.வைகாசி விசாகத் தையொட்டி, இன்று அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.காலை 5 மணிக்கு சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக மும்,பாலாபிஷேகமும் நடைபெற்றது.பின்னர் காலை 7.20 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு காலை முதல் மாலை வரை,பக்தர்கள் கொண்டுவந்த பாலில் சண்முகருக்கு பாலாபிஷேகம் நடை பெற்றது.பின்னர் பால் காவடி,பன்னீர் காவடி,இளநீர் காவடி,புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர். விழாவை யொட்டி,மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் திருப்பரங்குன்றம் பகுதியில் 200 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் பச்சையப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...