கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப நெல்லை பஸ், ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூருக்கு செல்லும் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் திரண்டதால் கூட்டம் அலை மோதியது.

News image
Updated On :4 நவம்பர் 2013, 4:47 am

ஷேக் அப்துல்காதர்

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூருக்கு செல்லும் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பஸ் நிலையம், ரயில் நிலையத்தில் திரண்டதால் கூட்டம் அலை மோதியது.

தீபாவளி பண்டிகை முடிந்து திங்கள்கிழமை வேலை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்வோர் புறப்பட்டனர். திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே முடிந்து விட்ட நிலையில் ஏ.சி. மற்றும் சிலிப்பர் வகுப்பு பெட்டிகளில் செய்வோர் பயணிக்க தயாரானர்.

முன் பதிவில் டிக்கெட் கிடைக்காதவர், வழக்கமாக சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வோர் சந்திப்பு ரயில் நிலையத்தில் பெருமளவில் திரண்டனர். ரயில் புறப்படும் நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே ரயில் நிலையத்தில் தங்கள் உடமைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து ரயிலில் பயணம் செய்தனர்.

90 பேர் பயணம் செய்ய வேண்டிய சாதாரண வகுப்பு பெட்டியில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பெண்கள் பெட்டியிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நடைபாதை, ரயில் பெட்டிகளில் இருக்கைக்கு மேல் உள்ள பகுதியிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.