கரூரில் நவம்பர் 9ம் தேதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க தகுதியான நிறுவனங்களுக்கு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு முகாம் கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நவ.9ம்தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க குறைந்தபட்சி கல்வித்தகுதியாக 5-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் பட்டய, பட்டப்படிப்புகள் பயின்றவர்கள், திறன் பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய அனைத்து தொழில்நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்குத்தேவையான இளைஞர்களை தேர்வு செய்யலாம். முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ள சிறு மற்றும் பெரிய தொழில்நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் பெயரினை நவ.7ம்தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.