கரிவலம்வந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் விசைத்தறித் தொழிலாளி இறந்தார்.
கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த சாமியா மகன் முத்துவேல்( 60).இவர் பச்சேரி கிராமத்தில் விசைத்தறிக் கூடம் நடத்தி வந்தார். அங்கிருந்து செவ்வாய்கிழமை காலை கரிவலம்வந்தநல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.ராஜபாளையம் பிரதானசாலைக்கு திரும்பியபோது, திருநெல்வேலி-தச்சநல்லூரில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குருநாதன் மகன் ஆறுமுகம் என்பவரது மோட்டார் சைக்கிளும்,முத்துவேல் மோட்டார் சைக்கிளும் மோதியதாம்.இந்த சம்பவத்தில் இருவரும் காயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த முத்துவேல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.இந்நிலையில் அவர் செவ்வாய்கிழமை மாலையில் இறந்தார். ஆறுமுகம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிóத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


