/

ராணுவ வீரரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ராணுவ வீரர், அவரது மனைவியை தாக்கிய ராணுவ வீரரின் தம்பி, அவரது மனைவி உட்பட நான்கு பேர் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.

News image
Updated On :10 நவம்பர் 2013, 12:51 pm

அறிவழகன்

ராணுவ வீரர், அவரது மனைவியை தாக்கிய ராணுவ வீரரின் தம்பி, அவரது மனைவி உட்பட நான்கு பேர் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்கு பதிந்துள்ளனர்.

கம்பம் மணிநகரத்தில் வசிப்பவர் பெருமாள் மகன் ரவீந்திரன்(34) இவர் அஸ்ஸôம் மாநிலத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி பிரியா (30) இவர்களுக்கும், ரவீந்திரனின் தம்பி ஜெயச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை ரவீந்திரன் வீட்டிற்கு வந்த ஜெயச்சந்திரன், அவரது மனைவி இலக்கியா, சதாசிவம் உட்பட 4 பேர், ரவீந்திரனையும், அவரது மனைவி பிரியாவையும் அடித்து உதைத்தனர். இதில் ரவீந்திரனுக்கும், பிரியாவிற்கும் காயம் ஏற்பட்டது.

ரவீந்தரனின் புகாரின் பேரில், ஜெயச்சந்திரன், இலக்கியா, சதாசிவம் உட்பட 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.