அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் பெய்து வரும் மழையால் அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் புதன்கிழமை மேலும் 2 உயர்ந்துள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியி்ல் பெய்து வரும் மழையால் அடவிநயினார், கருப்பாநதி அணைகளின் நீர்மட்டம் புதன்கிழமை மேலும் 2 உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சுத்தமல்லி உள்பட்ட பல்வேறு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை இருப்பதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை: பாளையங்கோட்டையில் 6.8 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 10 மி.மீ மழையும், களக்காட்டில் 3.8 மி.மீ மழையும், பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 4 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 1.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 4 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 6 மி.மீ மழையும், வடக்குபச்சையாறு அணையில் 3.8 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100.52 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.30 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 54.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 54.75 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1156.51 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 178 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 76.46 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 80 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 92 கனஅடியும், பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 382 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 174 கனஅடியும் நீ்ர்வரத்து இருந்தது.
பாசனத்திற்கு பாபநாசம் அணையில் இருந்து 1147.25 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 35 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 45 கனஅடியும், ராமநதி அணையில் 30 கனஅடியும், கருப்பாநதி அணையில் இருந்து 25 கனஅடியும், அடவிநயினார் அணையில் 45 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...