/

கம்பத்தில் இளம்பெண் சாவு

கம்பம் சின்னவாய்க்கால் தெருவில் செங்கல்கட்டி களத்தில் குடியிருந்து வருபவர் விஜயகுமார். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி(28), இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு

News image
Updated On :13 நவம்பர் 2013, 2:32 pm

அறிவழகன்

  கம்பத்தில் ஸ்டவ் மண்ணெண்ணெய் கசிந்து தீப்பிடித்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

 கம்பம் சின்னவாய்க்கால் தெருவில் செங்கல்கட்டி களத்தில் குடியிருந்து வருபவர் விஜயகுமார். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி(28), இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த 22.10.13 முருகேஸ்வரி குழந்தைக்கு பால் காய்சியபோது, மண்ணெண்ணெய் கசித்து சேலையில் தீப்பிடித்ததாம். இதில் முருகேஸ்வரி உடலில் தீ முழுவதுமாக பரவி அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், முருகேஸ்வரியின் உடலில் பரவிய தீயை அணைத்து கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்ததுள்ளனர்.

 அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் புதன்கிழமை முருகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.