கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை, மதுரை, தேனி உள்பட 7 மாவட்டங்களின் காப்பகத்தில் 3 வது தேசிய புலிகள் கணக்கெடுப்பு: டிச. 16 ல் தொடக்கம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை உள்பட 7 மாவட்டங்கள், களக்காடு முண்டன்துறை காப்பகம், மேகமலை சரணாலயம் ஆகிய காப்பகங்களில் 3 ஆவது தேசிய புலிகள் கணக்கெடுக்கும் பணி வரும் டிச. 16 ம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :17 நவம்பர் 2013, 8:42 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை உள்பட 7 மாவட்டங்கள், களக்காடு முண்டன்துறை காப்பகம், மேகமலை சரணாலயம் ஆகிய காப்பகங்களில் 3 ஆவது தேசிய புலிகள் கணக்கெடுக்கும் பணி வரும் டிச. 16 ம் தேதி தொடங்குகிறது.

நாடு முழுவதும் புலிகள் குறித்த கணக்கெடுப்பு ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தப்படுவதுண்டு. தற்போது 3 வது தேசிய புலிகள் கணக்கெடுப்பு வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிச. மாதம் 16 ம் தேதி தொடங்கி 23 ம் தேதி வரை 8 தினங்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் 17 வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், மேகமலை சரணாலயம் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

புலிகள், பிற விலங்கினங்களும் கணக்கெடுக்கப்படுகிறது. விலங்குகளின் கால்தடம், எச்சம், நேரடி கண்டறிதல், வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமிராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. கணக்கெடுப்பில் 279 பீட்டுகளாக பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

கணக்கெடுப்பில் வனப்பணியாளர்கள், விலங்கியல் பயின்ற தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதிவு செய்யப்படும் விலங்கினங்கள் குறித்த தடயங்கள் தில்லியில் உள்ள தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதி செய்யப்படும்.

முதல் கட்டமாக மாவட்ட வனஅலுவலர்கள், உதவி வனப்பாதுகாவலர்கள், புலிகள் காப்பக வனச்சரகர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் நடைபெற்றது. முகாமில் புலிகள் காப்பக கள இயக்குநரும், தலைமை வனப்பாதுகாவலருமான ராகேஷ்குமார்டோக்ரா பயிற்சி அளித்தார்.

இந்த முகாமில் புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் சி. குருசாமி (முண்டன்துறை), க. சேகர் (களக்காடு) மாவட்ட வனப்பாதுகாவலர்கள் எச். பத்மா (திருநெல்வேலி), செண்பகமூர்த்தி (தூத்துக்குடி), புலிகள் காப்பக வனச்சரகர்கள் எம். பாலேந்திரன், இளங்கோ, முருகையா, நடராஜன், பொன்ராஜ், வெள்ளத்துரை மற்றும் உதவி வனப்பாதுகாவலர்கள், மாவட்ட வன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.