விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை:அட்டாக்பாண்டி மனைவி மீது வழக்கு, அண்ணன் மகன் கைது

மதுரை அவனியாபுரத்தில் வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வெள்ளிக்கிழமை அட்டாக்பாண்டி மனைவி மீது அவனியாபுரம் போலீஸார்

News image
Updated On :22 நவம்பர் 2013, 3:01 pm

மது

மதுரை அவனியாபுரத்தில் வீட்டு உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வெள்ளிக்கிழமை அட்டாக்பாண்டி மனைவி மீது அவனியாபுரம் போலீஸôர் வழக்கு பதிவுசெய்து தேடி வருகின்றனர்.இதேவழக்கில் அட்டாக்பாண்டியின் அண்ணன் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் எல்.ஐ.சி ஊழியர்.இவருக்கு சொந்தமாக வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலணியில் உள்ள வீட்டில் திமுக பிரமுகர் அட்டாக்பாண்டி குடியிருந்து காலிசெய்ய மறுத்து கொலைமிரட்டல் விடுத்தாரம். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸில் புகார் செய்யப்பட்டு அதனடிப்படையில் 3 வழக்கு பதிவு செய்து போலீஸார் அட்டாக் பாண்டியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தனது வீட்டிற்கு வெள்ளையடிக்க வியாழக்கிழமை பிரிதிவிராஜ் வேலையாட்களுடன் வந்தாரம். அங்கு வந்த அட்டாக்பாண்டியின் மனைவி தயாளுஅம்மாள் மற்றும் அட்டாக்பாண்டியின் அண்ணன் மகன் பொன்னுமணி ஆகிய இருவரும் பிரிதிவிராஜை தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்தார்களாம்.

இதுகுறித்து அவனியாபுரம் போலீஸில் பிரிதிவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து பொன்னுமணியை(24) கைது செய்தனர்.மேலும் அட்டாக்பாண்டியின் மனைவி தயாளுஅம்மாளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.