கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 35 நாள்கள் வரை பராமரிப்பு பணிகள்

News image
Updated On :27 நவம்பர் 2013, 1:30 pm

இன்பராஜ்

 தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 35 நாள்கள் வரை பராமரிப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என தலைமைப் பொறியாளர் தெரிவித்தார்.

 தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன.  இதன்மூலம் நாளொன்றுக்கு 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் சில யூனிட்டுகளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.

 குறிப்பாக 3-வது யூனிட்டில் அடிக்கடி ஏற்படும் பழுதை சரிசெய்வதில் தாமதம் நிலவி வந்தது. இதையெடுத்து, ரூ. 6 கோடி செலவில் 3-வது யூனிட்டில் முழு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனல் மின் நிலைய நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

கடந்த 15 நாள்களில் 6 முறைக்கு மேல் 3-வது யூனிட்டில் பழுது ஏற்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதையெடுத்து, பழுதை சரிசெய்வதைவிட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என பொறியாளர்கள் முடிவு செய்தனர்.

 இதையெடுத்து, 3-வது யூனிட்டில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 52 அடி உயரம் கொண்ட பாய்லர் டியூப்பில் நடுப்பகுதியில் பழுதான 20 அடி முழுமையாக வெட்டி எடுக்கப்பட்டு புதிதாக டியூப் அமைக்கப்பட உள்ளது. 35 நாள்களுக்குள் பராமரிப்பு பணிகளை முடிக்க அனல் மின் நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 இதுகுறித்து அனல் மின்நிலைய தலைமைப் பொறியாளர் வள்ளியப்பன் கூறியது:

  3-வது யூனிட்டில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால், முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் இருந்து உதிரப் பாகங்கள் வரவேண்டியுள்ளது. குறிப்பிட்டக் காலக்கட்டத்துக்குள் உதிரி பாகங்கள் வந்து சேர்ந்துவிட்டால் 35 நாள்களுக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.