நடப்பு மாதத்துடன்(நவம்பர்) நிறுத்தப்படுவதாக இருந்த பெங்களூர்-நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் வரும் ஜன.25-ம்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்-நாகர்கோவில் இடையே தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கரூர் ரயில்நிலையத்திற்கு சனிக்கிழமை தோறும் இரவு 8.06 மணிக்கு வந்துவிட்டு 8.10-க்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயிலை வரும் 30ம்தேதியோடு நிறுத்தப்படும் என அண்மையில் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து இந்த ரயிலுக்கான முன்பதிவும் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ரயிலை தினமும் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது. தினம்தோறும் இந்த ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாராந்திர ரயிலை எப்போதும் போல வரும் ஜனவரி 25ம்தேதி வரை இயக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

