மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பெங்களூர்-நாகர்கோவில் விரைவு ரயில் ஜன.25-ம்தேதி வரை நீட்டிப்பு

பெங்களூர்-நாகர்கோவில் இடையே தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கரூர் ரயில்நிலையத்திற்கு சனிக்கிழமை தோறும் இரவு

Updated On :27 நவம்பர் 2013, 10:24 am

நடப்பு மாதத்துடன்(நவம்பர்) நிறுத்தப்படுவதாக இருந்த பெங்களூர்-நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் வரும் ஜன.25-ம்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூர்-நாகர்கோவில் இடையே தர்மபுரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கரூர் ரயில்நிலையத்திற்கு சனிக்கிழமை தோறும் இரவு 8.06 மணிக்கு வந்துவிட்டு 8.10-க்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயிலை வரும் 30ம்தேதியோடு நிறுத்தப்படும் என அண்மையில் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதையடுத்து இந்த ரயிலுக்கான முன்பதிவும் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த ரயிலை தினமும் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது. தினம்தோறும் இந்த ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டதும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாராந்திர ரயிலை எப்போதும் போல வரும் ஜனவரி 25ம்தேதி வரை இயக்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.