/

சாலை விபத்து: கவுன்சிலர் சாவு

 திருக்கோவிலூர் அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவத்தால் விருத்தாசலம் நகர் மன்ற கவுன்சிலர் உயிரிழந்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:02 pm

ச. மயில்வாகனன்

 திருக்கோவிலூர் அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவத்தால் விருத்தாசலம் நகர் மன்ற கவுன்சிலர் உயிரிழந்தார்.

 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகர் மன்ற அதிமுக கவுன்சிலர் அப்துல்பஷீர்(42). இவர், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது அண்ணன் மகள் ஷகிலாபானுவை(18) அழைத்துக்கொண்டு திங்கள்கிழமை காலை 6 மணிக்கு திருவண்ணாமலை சென்றார்.

 திருக்கோவிலூரை அடுத்த தபோவனம் அருகே எதிரே வந்த சரக்கு லாரி மீது கார் மோதியது. இதில் அப்துல்பஷீர், ஷகிலாபானு காயமடைந்தனர். இருவரையும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை செல்லும் வழியில் அப்துல்பஷீர் இறந்தார். ஷகிலாபானு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.