கரூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்ததாக இளைஞர்கள் 2 பேர் மீது கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கரூர் மக்கள்பாதை வஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோபி(30), செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த கோபால்(35)ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து கடந்த 12 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதை நம்பி ராயனூர், செல்லாண்டிப்பாளையம், தட்டங்காடு, ஆட்டயம்பரப்பு, கேசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் இவர்களது சீட்டில் சேர்ந்தோம். இதில் 50 மாதம் சீட்டி கட்டினால் 51-வது மாதத்தில் ரூ.100க்கு ரூ.20 வட்டி போட்டு கொடுக்கப்படும் என கூறியிருந்தனர். இதே போல தீபாவளி பண்டிகைக்காக ரூ.100, 200, 300 என வாரச்சீட்டும் நடத்தினர். இதை தவிர ரூ.50,000 முதல் ரூ. 1 லட்சம், 2லட்சம் வரையிலான ஏலச்சீட்டும் நடத்தி வந்தனர்.
இதையடுத்து சீட்டு முதிர்வு அடைந்தவர்கள் அவர்களிடம் பணம் கேட்டோம். அதற்கு அவர்கள் கடந்த வியாழக்கிழமை(24ம்தேதி)சீட்டுப்பணம் தரப்படும்,வீட்டிற்கு வாருங்கள் என கூறினர். இதையடுத்து வியாழக்கிழமை சென்று பார்த்த போது, அவர்களின் வீடுகளில் பூட்டியிருந்தன. அவர்கள் எங்களை ஏமாற்றி பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். சுமார் ரூ.2 கோடி வரை எங்களை ஏமாற்றியுள்ளனர். எனவே எங்களை ஏமாற்றி பண மோசடி செய்த இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்த அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலார்கள் படுகாயம்!
சென்னையில் 3 மணி வரை 68.13% வாக்குப்பதிவு! தொகுதி வாரியாக நிலவரம்!

அண்ணா நகர் செழிப்பாக இல்லை: வாக்களித்த பிறகு விஷால் கருத்து
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

