/

கேரளாவுககு காய்கறி லாரியில் ரேசன் அரிசி கடத்தல்:ஒருவர் கைது

கேரளாவுககு ரேசன் அரிசி கடத்திய காய்கறி லாரியுடன் ஒருவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிந்து  கைது செய்தனர்.

News image
Updated On :10 செப்டம்பர் 2013, 5:40 pm

அறிவழகன்

கேரளாவுககு ரேசன் அரிசி கடத்திய காய்கறி லாரியுடன் ஒருவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்கிழமை வழக்கு பதிந்து  கைது செய்தனர்.

 கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரசி கடத்துவதாக பறக்கும் படைக்கும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறைக்கும் தகவல் வந்ததாம். உழவர் சந்தை அருகே காய்கறி ஏற்றிக்கொண்டிருந்த மினி லாரியை மறித்து போலீஸார் சோதனை செய்தபோது, காய்கறி மூட்டைகளுக்கு இடையில் 5 ஜிப்பங்களில் 250 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பையும், டிரைவரையும் பிடித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரனை நடத்தியதில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  8-மைல் பகுதியைச் சேர்ந்த நெல்சன்(38) என்று தெரியவந்து. ரேசன் அரிசி கடத்தியதாக அவரின் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிந்து நெல்சனை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.