காதல் மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த கணவன்
அம்பாசமுத்திரம் அருகே வரதட்சனை கேட்டு காதல் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கணவன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


அம்பாசமுத்திரம் அருகே வரதட்சனை கேட்டு காதல் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கணவன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அருகே அயன்சி்ங்கம்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேம்பு மகன் மதியழகன் (23). வைராவிகுளம் காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் அபிராமி (22). 2 வருடங்களுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்டதால் அபிராமிக்கு அவரது பெற்றோர் தங்கநகைகள் எதுவும் சீதனமாக வழங்கவில்லையாம். இதற்கிடையே அபிராமியின் சகோதரி பிரபாவதிக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரபாவதிக்கு அவரது சகோதரர் சீதனமாக தங்கநகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்தாராம்.
இதையடுத்து அபிராமியிடம் மதியழகன் நீயும் தங்கநகைகள் வாங்கி வருமாறு கேட்டாராம். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் மதியழகன், தனது மனைவி அபிராமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தாராம்.
பலத்த காயமடைந்த அபிராமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கல்லிடைக்குறிச்சி போலீஸார் மதியழகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகி்ன்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...