சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாபநாசம் அணைக்கு 5852 கன அடி நீர்வரத்து

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5851.62 கனஅடி நீர்வரத்து இருந்தது.

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 5:10 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5851.62 கனஅடி நீர்வரத்து இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 29 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 3 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 8 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5851.62 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 5.60 அடி உயர்ந்து நீர்மட்டம் 105.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 1304.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சேர்வலாறு அணைக்கும் நீர்வரத்து கணிசமாக இருந்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 121.29 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 59.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து பெருங்கால் மதகு வழியாக பாசனம் நிலங்களுக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 168 கனஅடி நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 250 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம 3 அடி உயர்ந்து 63.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ராமநதி அணைக்கு விநாடிக்கு 140 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 64.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.