தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கன்னியாகுமரி பகவதியம்மன் நவராத்திரி திருவிழா: அக். 5-ல் தொடங்குகிறது.

முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்தில் எழுந்தருளுதல், காலை 8 மணிக்கு கன்னியா பூஜை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோவில் சுற்றி பவனி வருதல் நடைபெறும்.

News image
Updated On :28 செப்டம்பர் 2013, 3:23 am

டி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் நவராத்திரி 10 நாள் திருவிழா அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.

 முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்தில் எழுந்தருளுதல், காலை 8 மணிக்கு கன்னியா பூஜை, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 9 மணிக்கு தேவி வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோவில் சுற்றி பவனி வருதல் நடைபெறும்.

 திருவிழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், ஆன்மீக உரை, இன்னிசை நிகழ்ச்சிகள், சிறப்பு அன்னதானம், அம்பாள் திருக்கோவில் சுற்றி பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 10-ம் நாள் திருவிழாவான அக். 14-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு தேவியை அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அமர்வித்தல் நடைபெறும். தொடர்ந்து சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறும். பிற்பகல் 12 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேவி பரிவேட்டைக்கு செல்வார்.

  பரிவேட்டை ஊர்வலத்தில் குமரி பகவதியம்மன் பக்தர்கள் சங்கம் சார்பில் யானை, குதிரை, முத்துக்குடை, பஞ்சவாத்தியம், தேவராட்டம், தையம் ஆட்டம், பஜனை  ஆகியவை அணி வகுத்து செல்லும். ஊர்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம் வழியாக மகாதானபுரம் சந்திப்பில் உள்ள காரியக்கார மடத்தை சென்றடையும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.

 பின்னர் நரிக்குளம் பகுதியில் அம்மன் பாணாசூரன் என்ற அரக்கனை அம்பு எய்து வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு சுருள் வைத்து வழிபடுவார்கள்.  அங்கிருந்து பல்லக்கு வாகனத்தில் அம்மன் பஞ்சலிங்கபுரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் செல்வார். அங்கு அம்மனுக்கு ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து கோவில் கிழக்கு வாசல் வழியாக கோவிலை சென்றடைவார்.

 விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் இரா.ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் தா.சோனாச்சலம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.