மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் குளம்,ஏரிகள்,ஆழ்குழாய் கிணறுகள்

News image
Updated On :29 ஏப்ரல் 2014, 10:01 am

பார்திபன்

ஆலங்குடி பகுதிகளில் வாழை உற்பத்தி குறைந்த போதிலும் வாழைத் தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூர், புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் குளம்,ஏரிகள்,ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு வாழையை அதிகளவில் சாகுபடி செய்து வந்தனர்

கடந்த இரண்டு ஆண்டுகளில் போதியளவு பருவ மழை பெய்யாததை அடுத்து குளங்கள்,ஏரிகள் வறண்டு கிடக்கிறது.மும்முனை மின்சாரம் குறைந்த அளவே வழங்கப்படுவதால் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வாழைக்கு போதியளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகியதாலும்,இடுபொருள்களின் செலவீனம் அதிகரித்தாலும் விவசாயிகளுக்கு வாழைச் சாகுபடி தொடர் நஷ்டத்தை தந்தது.இதனால் குறைந்த நேரம் வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தால் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு குறுகிய கால சாகுபடி செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலானோர் வாழை சாகுடியை தவிர்ததால் பெருமளவு வாழை உற்பத்தி குறைந்தது.எஞ்சிய விவசாயிகள் தண்ணீர் பிரச்னை,ஓராண்டுக்கு மேலான உழைப்பு,இடுபொருள்களின் செலவீனம் அதிகரிப்பு ஆகியவற்றை கடந்து விளைவித்த வாழைத் தாரின் விலை இப்பகுதி  ஏல மண்டிகளில் ரூ.100,150க்கும் விலை போவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயி தங்கபாண்டியன் கூறியது:ஒரு வாழைக் கன்று ரூ.30 வரை கொடுத்து வாங்கி,உரம்,மருந்து,கம்பு என செலவு செய்து அதை பராமரித்து 10 மாதங்கள் வளாóத்து முடிக்கும்போது ஒரு  வாழை தாருக்கு ரூ. 200 வரை செலவாகிறது.ஓராண்டுக்கு மேல் எங்கள் உழைப்பை போட்டு,இவ்வளவு செலவு செய்து வாழையை விளைவித்து ஏல மண்டிகளுக்கு கொண்டு சென்றால் ரூ.150 க்கு விலை போகிறது.இதனால் ஒரு வாழைத்தாருக்கு ரூ.50 நஷ்டம் ஏற்படுகிறது.மேலும் இயற்கை சீற்றத்தால் வாழை தார்கள் மரங்களுடன் ஒடிந்து சாயும் போது பலத்த இழப்பு எற்படுகிறது. அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கு எடுக்கிறார்கள். ஆனால் இதுவரை அரசு எந்த இழப்பீடும்  வழங்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.