விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் அரசுக்கு ரூ.1.7 கோடி பங்குத் தொகை வழங்கல்

புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் மாநில அரசுக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ.1.7 கோடியை அதன் தலைவர் வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ., முதல்வர் என்.ரங்கசாமியிடம் வழங்கினார்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2014, 7:28 am

சுஜித்குமார்

புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் மாநில அரசுக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ.1.7 கோடியை அதன் தலைவர் வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ., முதல்வர் என்.ரங்கசாமியிடம் வழங்கினார்.

வில்லியனூர் அடுத்த ஆரியப்பாளையத்தில் அரசு சாராய வடிசாலை இயங்கி வருகிறது. இந்த ஆலை சார்பில் கடந்த 2011-12-ல் 138 லட்சம் லிட்டர் மதுவை ரூ.30.3 கோடிக்கு விற்று அதில் நிகர லாபமாக ரூ.5.21 கோடியை ஈட்டியது. தொடர்ந்து 2012-13-ல் 148.5 லட்சம் லிட்டர் மதுவை ரூ.35.43 கோடிக்கு விற்று அதில் நிகர லாபமாக ரூ.4.81 கோடி ஈட்டியது.

இதையடுத்து அரசுக்கான பங்கு ஈவுத் தொகையாக 2011-12-ம் ஆண்டுக்கு ரூ.1.03 கோடியும். 2012-13 இடைக்கால பங்கு ஈவாக ரூ.60 லட்சமும் வடிசாலை நிறுவனம் வழங்குகிறது.

இத்தொகையை நிறுவனத்தின் தலைவர் விஎம்சி. சிவக்குமார் மாநில முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினார். இயக்குநர் கே.கே.சிங், மேலாண் இயக்குநர் கே.குமாரகிருஷ்ணன், செயலர் எஸ்.குலோத்துங்கன், பொது மேலாளர் எஸ்.டென்சிங், மேலாளர் பி.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.