இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை வழக்கம் போல் ராஜேஸ்கண்ணன் வேலைக்கு சென்று விட பத்மாவதி, தனது மூன்று மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். காலை 11 மணியளவில் மனமுடைந்து பத்மாவதி தனது மூன்று மகள்களுக்கும் பூச்சிகொல்லி மருந்தை கொடுத்து, தானும் குடித்துள்ளார். இதில் 4 பேரும் மயக்கம் அடைந்த நிலையில், சிறிது நேரம் கழித்து கார்த்திகா மட்டும் வீட்டிற்கு வெளியே வந்து, பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் பூச்சி கொல்லி மருந்து குடித்ததை கூறியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 4 பேரையும் உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.