வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கச் சங்கிலியை துண்டித்து திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கச் சங்கிலியை துண்டித்து திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கீரமங்கலம் அருகேயுள்ள பெரியாளூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகள் நீலவேணி(27).இவருக்கும் பூவற்றகுடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பிரசவத்திற்காக தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்த நீலவேணி ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு கண் விழித்த நீலவேணி தனது அருகில் இருந்து ஒருவர் செல்வதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.சப்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் எழுந்து அவரை துரத்தியபோது ஒருவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளில் ஏறி இருவரும் தப்பிச்சென்றனராம்.
அதன் பிறகு நீலவேணி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியில் பாதி துண்டிக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அதன் மதிப்பு சுமார் 6 பவுன் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து நீலவேணி கீரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து காவல் ஆய்வாலர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தங்கச் சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...