என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பிளாஸ்டிக் கேன் வெடித்து 2 பேர் இறந்த வழக்கு: 2 தனிப்படைகள் அமைப்பு

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவர் வந்தவாசி நகராட்சியில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்

Updated On :31 ஆகஸ்ட் 2014, 3:42 pm IST

வந்தவாசி அருகே பிளாஸ்டிக் கேன் வெடித்து நகராட்சி ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40). இவர் வந்தவாசி நகராட்சியில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன்(34). இவர் வந்தவாசி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் சனிக்கிழமை லாரியில் குப்பைகளை எடுத்துச் சென்று வந்தவாசி-செய்யாறு சாலையில் எச்சூர் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் பிளாஸ்டிக் கேன்கள் இருந்ததை பார்த்த இருவரும் லாரியை நிறுத்திவிட்டுச் சென்று அந்த கேன்களை திறந்து பார்த்துள்ளனர். அப்போது பிளாஸ்டிக் கேன்கள் வெடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரமேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக வந்தவாசி டிஎஸ்பி மகேந்திரன், வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் கேன்களில் இருந்த ரசாயணத்தின் வகை, இவற்றை சாலையோரம் போட்டவர்கள் யார் என்பது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி துப்புரவு பணியாளர்கள் அஞ்சலி

வந்தவாசி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மெழுவர்த்தி ஏந்தி அம்மையப்பட்டு, சவேரியார்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று வெங்கடேசன், அர்ஜூனன் ஆகியோரது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் நகர்மன்றத் தலைவர் எல்.அப்சர், ஆணையர் எஸ்.லட்சுமி, பொறியாளர் ஈ.மகாதேவன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் ஆகியோரும் இருவரது உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.