விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காரைக்கால் மீனவர்களை விடுவிக்க தீவிர முயற்சி: புதுவை முதல்வர் ரங்கசாமி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த 21 மீனவர்களை விடுவிக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது என முதல்வர் என்

News image
Updated On :10 டிசம்பர் 2014, 10:45 am

சுஜித்குமார்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த 21 மீனவர்களை விடுவிக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது என முதல்வர் என்.ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் ஐரோப்பிய யூனியன் தூதர்களை புதனக்õழமை சந்தித்தபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை கடற்படையால் காரைக்காலைச் சேர்ந்த 21 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அவர்களின் பெயர்ப்பட்டியலை தரும்படி மீன்வளத்துறையிடம் கூறியுள்ளேன். இதுதொடர்பாக பிரதமருக்கு உடனே கடிதம் எழுதி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தில்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டேன். திட்டக்கமிஷனுக்கு பதிலாக மாற்று அமைப்பு ஏற்படுத்துவதில் புதுச்சேரிக்கு எத்தகைய நன்மை கிடைத்தாலும் வரவேற்கத்தக்கது தான்.இதுதொடர்பாக மாநில அரசின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியின் நிதிநெருக்கடியை தீர்க்கும் வகையில் எந்த அமைப்பு தொடங்கப்பட்டாலும் வரவேற்போம். முதலில் புதுவையை மத்திய நிதிக்குழுவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

மாநில அந்தஸ்து பிரச்னை

தில்லியில் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளேன். புதுவைக்கு மாநில அந்தஸ்து, நிதி நெருக்கடிக்கு தீர்வு குறித்து அவரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்.மாநில அந்தஸ்து தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு தற்போது வாய்ப்பில்லை.

பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க நடவடிக்கை

மேரி பில்டிங்கை பாதுகாக்கக் தான் அரசு ரூ.7 கோடி நிதியை ஒதுக்கியது. அதற்குள் எதிர்பாராத விதமாக அக்கட்டடம் இடிந்து விழுந்து விட்டது.  புதுவையில் பழமையான பான்சியோனா, கலவைக்கல்லூரி, வ.உ.சி. பள்ளிகளை  புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமான கட்டடங்களின் நிலை, ஸ்திரத்தன்மை குறித்து பொதுப்பணித்துறை மூலம் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2012-ம் ஆண்டே பாரம்பரிய கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என  இன்டாக் அமைப்பு அறிக்கை அளித்திருந்தது குறித்து கேட்டபோது, நிதி நிலை மோசமாக இருந்தாலும், மேரி பில்டிங்கை சீரமைக்க ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டதே என முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.