தமிழர்களுக்கு தீங்கு என்றால் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் போராடுவோம்: இளங்கோவன் ஆவேசம்
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுவிக் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய


தேனி மாவட்டம் லோயர்கேம்பில் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுவிக் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் தமிழர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார்.
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில், அவரின் திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்,
- முல்லைப் பெரியாறு அணையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறையினர் தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொண்டு செல்லும் உணவு பண்டங்களைக்கூட கொண்டு செல்ல விடாமல் அராஜகம் செய்து கொண்டிருக்கிறார்கள், இதை அவர்கள் செய்யக்கூடாது. சுமூகமான உறவு வேண்டும் என அவர்கள் நினைத்தால் தமிழக அதிகாரிகளை கடமையை ஆற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பதட்டமான சூழ்நிலை உருவாக்குவதில் தொடர்ந்து கேரள அதிகாரிகள் ஈடுபட்டார்களேயானால் அது தமிழக அரசுக்கும் கேரள அரசுக்கும் என்பதைவிட, தமிழக மக்களுக்கும் கேரள மக்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகி விடும். எனவே, இதை கருத்தில் கொண்டு 14-ந்தேதி கேரள முதல்வர் உம்மன்சாண்டியை நானும், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கோபிநாத் மற்றும் முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் சந்திக்க உள்ளோம். அப்போது கேரள வனத்துறையினரின் அத்துமீறிய செயல்கள் குறித்து எடுத்துக்கூறி, விரிவான கோரிக்கை மனுவை அளித்து, கேரள வனத்துறையின் அத்துமீறல் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வரிடம் கேட்டுக் கொள்வேன்.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து என்று கேரளாவில் தெரிவித்தார்கள், 142 அடி உயர்த்தி நிரூபித்து காட்டியாச்சு எந்த ஆபத்தும் இல்லை. உச்சநீதிமன்றம் அனுமதிக்கும்போது, மேலும் அணையின் நீர்மட்ட உயரத்தை 152 அடியாக உயர்த்தி ஆபத்து இல்லை என்று நிரூபிக்கலாம். கங்கிரஸ் கட்சி தமிழர்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும், குறிப்பாக தமிழர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் எதிர்த்து போராடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...