/

கோவில்பட்டியில் நடக்க உள்ள மாவட்ட ஹாக்கி போட்டியில் பங்கேற்க அழைப்பு

கோவில்பட்டியில் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கும் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2014, 6:13 am

இன்பராஜ்

கோவில்பட்டியில் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கும் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் மாவட்ட அளவிலான சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி லீக் போட்டிகள் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி 3 ஆம் தேதி வரை கோவில்பட்டி இலுப்பையூரணி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

 இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு, நுழைவு கட்டணம் கிடையாது.  போட்டிகள் ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.  இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஹாக்கி  அணிகள் தங்கள் அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்ப்பட்டியலை முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் விதத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டரங்கம், ஜார்ஜ் ரோடு,  தூத்துக்குடி 628 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 மேலும் தொடர்புக்கு 0461 2321149 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு செய்யும் அணிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.  மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் அணி மண்டல அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.