/

தூத்துக்குடியில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2014, 5:34 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் உள்ள 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் வந்துள்ளது.

திருநெல்வேலி மாநகர காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தூத்துக்குடியில் இயங்கும் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறினார்.

இதையடுத்து, தூத்துக்குடி பகுதி போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள பள்ளிகளில்  சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த அழைப்பு வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்து.

விசாரணையில் இந்த அழைப்பு தூத்துக்குடி வட்டக்கோயில் அருகே ஒரு பொதுத் தொலைபேசி அழைப்பில் இருந்து வந்தது என்று தெரிய வந்துள்ளது. மேலும், தொலைபேசியில் பேசியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.