கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் ம. ரவிககுமார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் ம. ரவிககுமார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 2600 ஆட்டோக்களும், கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூரில் முறையே 500 மற்றும் 700 ஆட்டோக்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என அக்டோபர் 17 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வ்நதது.
தற்போது மீட்டர் தட்டுப்பாடு காரணமாக 2 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மீட்டர் வரும் வரை குறைந்தபட்சமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ. 25 வசூலிக்க வேண்டும் என்றும், அதன் பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, காத்திருப்பு கட்டணமாக 5 நிமிடத்துக்கு ரூ.3.50-ம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 வசூல் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் பகல் நேர கட்டணத்தைவிட கூடுதலாக 50 சதவீதம் வசூல் செய்ய வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யபடுவதுடன் உரிமமும் ரத்து செய்யப்படும்.
ஆட்டோக்களில் நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்தால் பொதுமக்கள் 0461- 2341020 அல்லது 8056932232 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். இதுதவிர, தூத்துக்குடி ரயில் நிலையத்திலும், பழைய பஸ் நிலையத்திலும் பயணிகளுக்கு உதவும் வகையில் ஆட்டோ பதிவு செய்ய இரண்டு உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. டிசம்பர் 27 ஆம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...