செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தியை கண்டுபிடித்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தியை கண்டுபிடித்துள்ளனர்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் ஆர்.விஜயஷங்கர், ஜி.அபிஷேக் லூயிஸ் ராஜ் ஆகியோர் துறைத் தலைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரனின் ஆலோசனையின்படி இந்த ரோபோடைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த ஊர்தியை ஆன்ட்ராய்டு போன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதற்காக ஆன்ட்ராய்டு போனில் ஒரு ஆப்ஸன் உருவாக்கப்பட்டுள்ளது. இது புளுடூத் மூலம் கட்டளை அனுப்பி அதற்கேற்ப வேலையைச் செய்யும்.இதில் குரல் கட்டளை இணைக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனம் வழங்கியுள்ள எம்.எஸ்.பி.430 மைக்ரோ கண்ட்ரோலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த செர்வோ மோட்டார் கண்ட்ரோல் சர்க்யூட் உள்ளது.
இதில் இரண்டு 6 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரிகள் உள்ளன. அது எல்லா போர்டுக்கும் 5 வோல்ட் மின்சாரத்தை அனுப்பும். புளுடூத் பொதுவாக ஒரு கட்டளை அல்லது குறிப்பேடு அனுப்பவும் வாங்கவும் பயன்படுத்தப்பட்டும். ஆனால் இதில் புளுடூத்தை மைக்ரோகண்ட்ரோலரில் கட்டளைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த மாதிரி ஊர்தியை 10 முதல் 20 மீட்டர் தூரத்திலிருந்து 5 முதல் 10 கிராம் எடையைத் தூக்குவதற்கும், பொருளை மற்றொரு இடத்தில் வைப்பதற்கும் பயன்படுத்தலாம். எதிர் காலத்தில் இதை வை பை இணையதளத்தை செல்போனில் இணைத்து 100-150 மீட்டர் தூரத்திலிருந்து செல்போன் மூலம் இந்த ஊர்தியை ரோபட் கைகைப் பலப்படுத்தி 5 கிலோ வரை தூக்குவதற்கும் பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கி வைக்கவும் பயன்படுத்தலாம்.
இந்த புதிய வடிவமைப்பற்கு காப்புரிமை பெறுவதற்காக சென்னையில் உள்ள வடிவமைப்பு காப்புரிமைக் கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மாணவர்கள் கூறினர்.ரோபோட்டை தயாரித்து செல்போன் மூலம் இயக்கிக் காண்பித்த மாணவர்களையும், துறைத் தலைவரையும் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வேந்தரின் தனிச் செயலாளர் டாக்டர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...