கல்லூரியில் பங்குதாரராக சேர்ப்பதாக்கூறி கரூரைச் சேர்ந்தவரிடம் ரூ.10.80 லட்சம் மோசடி செய்ததாக 4 பேராசிரியர்கள் உள்பட 6 பேர் மீது போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் காமராஜபுரம் ராம்நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரிடம் கடந்த வருடம் நாமக்கல் அண்ணா கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் சந்திரசேகரன், திருவள்ளுவர் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் லோகநாதன், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சரவணக்குமார், கணேசன், வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை செயலாளர் தியாள் நாயக், அறக்கட்டளை தலைவர் பத்மாவதி ஆகியோர் வெள்ளியணையில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்போவதாகவும், அதில் பங்குதாரராக சேர ரூ.10.80 லட்சம் தரவேண்டும் என கூறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஞானசேகரனும் ரூ.10.80 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் அவரது பணத்தை கல்லூரியின் அறக்கட்டளைக்கு கொடுத்ததாக கணக்கில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அவர் தன்னை பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி, அறக்கட்டளைக்கு இலவசமாக கொடுத்து விட்டதாகக் கூறி ஏமாற்றி விட்டார்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு கடந்த 31.12.2013-ல் கரூர் ஜேஎம் 2-ல் வழக்குக்தொடர்ந்தார்.
இந்த வழக்குத் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழரசி புதன்கிழமை சந்திரசேகரன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.