/

பழனியருகே தாய், மகள் கிணற்றில் விழுந்து தற்கொலை

பழனி தட்டான்குளம் புதுநகரை சேர்ந்தவர் கணேசன்(42).  இவரது மனைவி விஜயலட்சுமி(35).  இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமான நிலையில் பாண்டிதுர்கா(10) என்ற மகள் உள்ளார். இவர்

News image
Updated On :10 பிப்ரவரி 2014, 11:26 am

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே தாயும், மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

பழனி தட்டான்குளம் புதுநகரை சேர்ந்தவர் கணேசன்(42).  இவரது மனைவி விஜயலட்சுமி(35).  இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமான நிலையில் பாண்டிதுர்கா(10) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.  கணேசன் மளிகைக்கடை நடத்தி வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்படவே சிலகாலம் வறுமையில் வாடியுள்ளார்.  தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.  பொருளாதார பிரச்சினையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதனால் விஜயலட்சுமி மனவருத்தத்தில் இருந்துள்ளார். 

கடந்த இருதினம் முன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்துக்கு செல்வதாக விஜயலட்சுமி, மகள் பாண்டிதுர்காவுடன் சென்றுள்ளார். விசேஷ வீட்டுக்கு செல்லாத அவர் வீட்டிற்கும் திரும்பவில்லை. பல இடங்களில் மனைவி, மகளை தேடிய கணேசன் திங்கள்கிழமை பழனி டவுன் போலீஸாரிடம் புகார் செய்ய சென்றுள்ளார். 

அப்போது பழனி அருகே கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில் செல்லும் உள்ள தனியார் தோட்டக்கிணற்றில் இருசடலங்கள் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  கணேசனையும் உடன் அழைத்து சென்று பார்த்த போது கிணற்றில் சடலமாக மிதந்த இருவரும் விஜயலட்சுமி, பாண்டிதுர்கா என்பது தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து சடலங்களை மீட்ட போலீஸார் பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.  சடலம் கிடைத்த இடத்தில் கிடைத்த கடிதத்தில் தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதியிருந்தது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.