பட்டுக்கோட்டை அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் எரிந்த நிலையில் பெண் உடல்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பது திங்கள்கிழமை இன்று தெரிய வந்தது.


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தலையில் வெட்டுக் காயத்துடன் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பது திங்கள்கிழமை இன்று தெரிய வந்தது.
பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிராமத்தில் தனியார் பெண்கள் கல்லூரி அருகிலுள்ள மயானப் பகுதியில் திங்கள்கிழமை காலை 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டு, கருகிய நிலையில் கிடந்தது.
அந்தப் பெண் மஞ்சள் நிற சுடிதார், கைகளில் இரு வளையல்கள், கழுத்தில் ஒரு சங்கிலி அணிந்திருந்தார். அவரது தலையின் பின்புறம் அரிவாள் வெட்டுக் காயம் காணப்பட்டது. அவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப் பதிந்து, பெண் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் துப்பு துலக்க தஞ்சையிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ராஜராஜன் பெண் சடலத்தைச் சுற்றி வந்து சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். இறந்து கிடந்த பெண் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அந்தப் பெண்ணை யாரோ கொலை செய்து, சடலத்தை கரம்பயம் மயானப் பகுதிக்குக் கொண்டு வந்து எரித்துச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...