ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவை மாநகராட்சி பட்ஜெட்: 28.81 கோடி பற்றாக்குறை

கோவை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2014-15 ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் 28.81  கோடி ரூபாய் பற்றாகுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2014, 5:03 am

வேல்முருகன்

கோவை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2014-15 ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் 28.81  கோடி ரூபாய் பற்றாகுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தில்லூர் 3வது குடிநீர் திட்டத்துக்கு ஆய்வறிக்கை தயார் செய்ய ரூ.1 கோடி ஒதுக்கீடு, கோவையில் பொழுதுபோக்குக்கு தீம் பார்க் விரிவான திட்டட அறிக்கைக்கு  50 லட்சம் ஒதுக்கீடு கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் விரிவான திட்ட அறிக்கைக்கு ரூ 1 கோடியும்  புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க ரூ 50 லட்சம் ஒதுக்கிட்டு, மின் சிக்கன விளக்குகள் புதுப்பித்தல் திட்டத்தில் 37 ஆயிரம் மின் விளகுகளுக்கு  ரூ. 3 கோடி ஒதுக்கீடு சூர்ய ஒளி மூலம் மண்டல அலுவலக வளாகங்களில் தலா 7.50 கிலோவாட் திறன் கொண்ட சோளார் பேனல் அமைக்கவும் மகப்பேறு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சோளார் பேனல்கள் அமைக்க ரூ.2 ஒதுக்கீடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த 5 சாலைகளில் நடைபாதைகளை அகலப்படுத்த 3 கோடி ருபாய் ஒதுக்கீடு குறிஞ்சி பகுதியில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி மற்றும் பகிர்மான குழாய்கள் அமைத்து விநியோகம் செய்ய 42.55 கோடியில்  இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டம் தயார் படுத்தப்படும். என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.