ஆலங்குடியில் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.
ஆலங்குடியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.முன்னதாக ஆலங்குடி சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு.ஆலங்குடி அரசு மருத்துவமனையில் த


ஆலங்குடியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.முன்னதாக ஆலங்குடி சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு.ஆலங்குடி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிறந்த பெண்குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.நோயாளிகளுக்கு பழம்,ரொட்டி உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டது.ஆலங்குடியில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.கல்லாலங்குடி அரசு பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.விழாவில் ஒன்றியக்குழுத் தலைவர் துரைதனசேகரன்,துணைத் தலைவர் பழனிச்சாமி,பேரூராட்சித் தலைவர் ஏ.டி.மணமோகன்,துணைத் தலைவர் இளங்கோ,வீட்டு வசதி சங்கத் தலைவர் ராஜேந்திரன்,ஒன்றிய அவைத் தலைவர் தமிழ்மணி,கூட்டுறவு சங்கத் தலைவர் சித்திரைக்கன்னு,யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...