/

நெடுஞ்சாலை படத்துக்காக ஒரு மாதம் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் - நடிகர் ஆரி

நெடுஞ்சாலை பட வெளியீட்டுக்கு முன்னதாக ஒருமாத காலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 பிப்ரவரி 2014, 3:10 pm

என்.​ அங்​கு​பாபு

நெடுஞ்சாலை பட வெளியீட்டுக்கு முன்னதாக ஒருமாத காலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.

     இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் நடித்த ரெட்டைச்சுழி, மாலைப்பொழுதின் மயக்கத்திலே உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி.  இவர் பழனிக்கோயிலுக்கு வியாழக்கிழமை வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார்.  தயாரிப்பாளர்கள் சவுந்தர்ராஜன், ஆஜி ஆகியோர் தயாரிப்பில் பிரபல இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் வரும் மார்ச் மாதம் ஆரி கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள படம் நெடுஞ்சாலை.

  இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவில் வெளியிடவுள்ளது.  இப்படம் குறித்து நடிகர் ஆரி அளித்த பேட்டியில், இப்படத்திற்கு சத்யா இசை அமைத்துள்ளார்.  கேரள நடிகை ஷிவதா கதாநாயகியாகவும், பாலிவுட் நடிகர் பிரசாந்த் நாராயணன் வில்லனாகவும், தம்பி ராமையை உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம்  தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் சுமார் 10 கோடி மதிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

 ஆக்க்ஷன், சென்டிமென்ட், காதல் என அனைத்தும் கலந்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இப்படம் 1960ல் இருந்து தற்போதைய காலம் வரையான காலங்கள் வருமாறு தயாரிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் 1960களில் பயன்பாட்டில் இருந்த ஆட்டோ பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆட்டோ படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக மார்ச் மாதம் முதல் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்லப்படுகிறது. 

இதன் மூலம் பொதுமக்களுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.  ஹெல்மட் அவசியம், சாலைகளில் உள்ள சிக்னல்களை மதித்தல், துண்டுப்பிரசுரம் வழங்கல், விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய டிசர்ட் வழங்கல், வினாடிவினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கல் என இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை, மதுரையில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

  மேலும், அவர் கூறுகையில், ஆட்டோகிராப், மிருகம், தவமாய் தவமிருந்து, சுப்ரமண்யபுரம் உள்ளிட்ட பல படங்களில் காலங்களுக்கு ஏற்ப நடிகர்கள் உடல்மாற்றத்துக்கு பயிற்சியாளராக இருந்ததாகவும், இதற்காக அதிக சிரமங்கள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.  இந்த படங்களுக்கு தான் பயிற்சியாளராக இருந்தது நெடுஞ்சாலை படத்துக்கு மிகவும் பயன்பட்டதாக தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.